Monday, August 19, 2013

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு

அப்துல்லாஹ் பெரியார்தாசன் மறைவு - நாளை ஜனாஸா தொழுகை

Dr. அப்துல்லாஹ் பெரியார்தாசன் அவர்கள் ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை (ஆகஸ்டு 20) சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் காலை 9.00 மணியளவில் நடைபெறும். இன்ஷா அல்லாஹ்.
அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வெற்றிக்கு துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...


பேராசியர் DR.அப்துல்லாஹ் என்கிற பெரியார் தாசன் அவர்கள் இன்று (19/8/2013) 1.23 A.M மரணம் அடைந்தார்கள் , அவரின் உடலை முஸ்லிம்கள் இஸ்லாமிய முறை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது அவரது மகன் சகோதரர் வளவன் அவர்கள் மறுத்து விட்டார் ,மேலும் அவர் பேராசிரியர் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக மருத்துவ கல்லுரிக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் இறுதியாக கோரிக்கை வைத்தததால் ,அவருடைய இறுதி ஆசை படியே அவரது உடலை மருத்துவ கல்லுரிக்கு கொடுத்துவிடுவதாக அறிவித்தார்,மேலும் முஸ்லீம்கள் தரப்பில் ஜனாஸா தொழகை நடத்துவோம் என்ற பொழுது சம்மதம் தெரிவித்தார் ,அதன் அடிப்டையில் நாளை அவரது ஜனாஸா தொழுகை எங்கு நடத்துவது என்று இஸ்லாமிய இயகங்கள் நாளை ஓன்று கூடி முடிவு எடுக்கும் இன்ஷா அல்லாஹு ,அன்னாரது பாவங்கள் அனைத்தும் அல்லாஹுவால் மன்னிக்க பட்டு நாளை மறுமையில் வெற்றி பெற்றிட துஆ செய்யவும்...

யா அல்லாஹ்!
இவர்களின் பாவங்களை மன்னித்து, மறுமையில் சிறந்த இடத்தை கொடுப்பாயாக.
யா அல்லாஹ்!
நபிகார்கள், சுகதாக்கள், சிதீக்கீன்கள் மற்றும் சிறந்த இறை அடியார்களுடன் இவர்களையும் ஆக்கி வைப்பாயாக.

ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்....
Aug192013

d9cfbeac-7405-420c-824e-adcb874a9843_S_secvpfஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனாஷ் மருத்துவ மையத்திற்கு சென்ற வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி அழைத்து வரப்பட்டார். 41 வயது நிரம்பிய வநேசா தனசியோ என்ற அந்தப் பெண்ணுக்கு இதயத்திலிருந்த ரத்தக்குழாய் ஒன்று முற்றிலுமாக அடைத்திருந்தது.வாசிப்பு தொட