Monday, December 2, 2013

தி.மு.க.விற்கு பா.ஜ.க. ஆதரவளித்தால்:பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி mulim league


பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மாநாடுகள், போராட் டங்கள் என்று பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் நாங்கள் மட்டும் சளைத்த வர்களா என்று காட்டும் வண்ணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் ஷரீஅத் மாநாடு, மாணவர் மாநாடு, மஹல்லா ஜமாஅத் மாநாடு, இளம்பிறை மாநாடு என்று மாதந்தோறும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொகிதீ னிடம் `மக்கள் ரிப்போர்ட்’டின் முதன்மை ஆசிரியர் எஸ்.எம். சையது இக்பால் நேர்காணல் நடத்தினார். அந்த நேர்காணல் வாசகர்களின் பார்வைக்கு இங்கே.....

இந்த உரையாடலின் போது இ.யூ முஸ்லிம் லீக் எஸ்.டி.யூ. மாநிலச் செயலாளர் கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கீ ஆகியோர் உடனிருந்த னர்.

மக்கள் ரிப்போர்ட்: பரபரப் பைக் காட்டாத முஸ்லிம் லீகில் கூட பல்வேறு மாநாடு கள் என்று களைகட்ட ஆரம்பித்து விட்டதே, இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன?. பேரா.காதர் மொகிதீன்: முஸ்லிம் லீகின் இந்த மாநாடுகள் சமீப கால பரபரப்பு நடவடிக்கை என்று சொல்லிவிட முடியாது. இவையெல்லாம் நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு வரும் வாடிக்கை யான, வழக்கமான நடவடிக் கைகள் தான்.
http://mathuhaimannar.blogspot.ae/

No comments:

Post a Comment