Friday, August 30, 2013

நிலாவில் நீர்: இந்தியாவின் சந்திரயான் -1 

தகவல்களை உறுதி செய்தது நாசா!!

வாஷிங்டன்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான் -1 விண்கலம் அனுப்பிய நிலாப்பற்றிய தகவல்கள் மூலம் நிலாவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உறுதி செய்துள்ளது. நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை 
இந்தியா கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் 
விண்ணில் ஏவியது. அது நிலவின் மேற்பரப்பு,
 மலை முகடுகள், மண் போன்றவற்றை
 படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது.
 சந்திரயான் அனுப்பிய புகைப்படங்கள்,
 தகவல்களை "நாசா' விஞ்ஞானிகளுடன் 
சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
 அப்போது, நிலவில் தண்ணீர்
 இருப்பதற்கான தடயங்களை சந்திரயான்
 சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள்
 கண்டறிந்தனர். 



 சந்திரயான் -1 ..  அனுப்பிய
 தடயங்களை ஆராய்ந்து வந்த நாசா,
 தற்போது நிலவில் நீர் மூலக்கூறுக
ள் இருப்பதற்காக சாத்தியங்களை
 உறுதி செய்துள்ளது.

No comments:

Post a Comment